சொத்து பங்கீட்டில் பெண்களுக்கும் சம உரிமை… முதல்வர், துணை முதல்வர் வரவேற்பு!!

சொத்து பங்கீட்டில் பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

குடும்பச் சொத்துப் பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், சொத்தைப் பிரித்து பங்கு வழங்கும்போது ஆண் பிள்ளைகளைப் போலவே பெண்களுக்கும் சம பங்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. 2005-ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பான வழக்கில் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு பெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்ணியம் போற்றுபவர்கள் மத்தியில் ஆதரவு கரம் பெறப்பட்டது.

இந்த நிலையில்,சொத்துக்களில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற தீர்ப்பால் மகிழ்ச்சி எனவும், சமூக நீதியை காப்பாற்றும் விதமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

அதேபோல, சொத்தில் பெண்களுக்கும் சமஉரிமை உண்டு என்ற தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே