ஆசிரியர் ராஜகோபால் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை கேகே நகரில் உள்ள பிரபல பள்ளியான பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் வணிகவியல் ஆசியராக உள்ளவர் ராஜகோபால், இவர் அங்குப் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து அப்பள்ளியில் படித்த மாணவிகள் அளித்த புகாரின்பேரில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராஜகோபால், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜகோபால் மீது முன்னாள் மாணவிகள் புகார் அளித்துக்கொண்டே இருந்ததால் அவர் மீது கடந்த ஜூன் மாதம் குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இந்நிலையில் சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபால் மீது அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஏழு பேர் அளித்த புகாரின் அடிப்படையில் வாக்குமூலம் பெறப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 17 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே