ரயிலில் இருக்கும் ஒரு எலியைப் பிடிக்க சென்னை ரயில்வே நிர்வாகம் 22 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறது என்றால் நம்பமுடிகிறதா??
மே 2016 முதல் நடப்பாண்டு ஏப்ரல் வரை எலிகள் அச்சுறுத்தலை சமாளிக்க எவ்வளவு செலவானது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில் 5 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பதில் கிடைத்துள்ளது.
இதில் 2018-2019-இல் மட்டும் 2 ஆயிரத்து 636 எலிகள் பிடிக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே பதிலளித்துள்ளது.
தாம்பரம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் 1,715 எலிகள் பிடிக்கப்பட்டுள்ளன.
தோராயமாக ஒரு எலி பிடிக்க 22,334 ரூபாய் செலவு பிடிப்பதாக கூறப்பட்டுள்ளது.