தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்ற பிக்பாஸ் சீசன் 5 பிர ம் மாண்டமாக துவங்கியுள்ளது. 

நிகழ்ச்சியில் முதலாவதாக தோன்றிய கமல்ஹாசன், புதியதாக கட்டப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

அதற்கடுத்து நிகழ்ச்சி அரங்குக்கு வந்த அவர், பிக்பாஸ் 5 சீசனுக்கான முதல் போட்டியாளரை வரவேற்றார். பிரபல கானா பாடகியும், பிபிசி-யின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றவருமான இசைவானி முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

அதை தொடர்ந்து இரண்டாவது போட்டியாளருக்கான அறிமுகம் நடந்தது. சின்னத்திரை நடிகரும், நடிகர் பாக்கியராஜின் துணை இயக்குநருமான ராஜு ஜெயமோகன் இரண்டாவது போட்டியாளராக அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வருவதற்கான காரணத்தை கமல்ஹாசனிடம் அவர் தெரிவித்தார். அதை தொடர்ந்து ஆன்லைன் மூலமாக பாக்கியராஜ் நிகழ்ச்சிக்குள் வந்தார். தன்னுடைய உதவியாளருக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

ஏற்கனவே ராஜு ஜெயமோகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்த தகவல் வெளியாகிவந்தது. அதை உறுதி செய்யும் விதமாக அவருடைய அறிமுகம் நிகழ்ச்சியில் அமைந்தது. இதனால் அடுத்தடுத்த போட்டியாளர்கள் யாராக இருக்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே