கொரோனா அச்சம் காரணமாக சட்டசபை கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. அதனால் சட்டசபை கூட்டத்தொடரை முன்கூட்டியே மார்ச் 31-ம் தேதியே நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு முன்னதாகவே கூட்டத்தொடரை நிறைவு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின.
சட்டமன்ற கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை புறக்கணிப்பதாக தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம்லீக் கட்சிகள் அறிவித்தன.
அதன்படி அந்த கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர்.
இதற்கிடையே சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சபாநாயகர் தனபால் அறிவிப்பு வெளியிட்டார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைவதாக அவர் அறிவித்தார்.