தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும் – தமிழக அரசு

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 415 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலமாகவே பரவுவதால், அவர்களை 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வீடு திரும்பியவர்களின் வீட்டில் “தனிமைப்படுத்தப்பட்டவர்கள்” என்று ஸ்டிக்கர் உள்ளதாகவும் மொத்தமாக 3,000 நபர்களின் வீட்டில் அந்த ஸ்டிக்கர் ஓட்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் அவர்களின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கொரோனா அறிகுறி இருந்தும் அதனை அரசுக்கு தெரிவிக்காமல் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்; அரசின் உத்தரவுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே