நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுக்கு வந்தால் எதிர்க்க மாட்டேன் : சுப்பிரமணியன் சுவாமி

இந்து மதத்திற்காக பேசினால் தான் ரஜினியுடன் இருப்பேன் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் சுப்ரமணியன் சுவாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசுகையில், ரஜினி பாஜக விற்கு வந்தால் எதிர்க்க மாட்டேன்.

ஆனால் பழைய சினிமா வசனங்களை பேசினால் எதிர்ப்பேன். இந்து மதத்திற்காக பேசினால் நான் ரஜினியுடன் இருப்பேன் என்று கூறினார்.

விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அநியாயம் நடந்து இருந்தால் வழக்கு தொடரலாம் என்று பதிலளித்தார்.

ராமர் கோவில் கட்டவும், சோனியா காந்தி, சிதம்பரம் ஆகியோரை ஜெயிலுக்கு அனுப்புவதில் தான் பிஸியாக இருப்பதாகவும், அதனால் பட்ஜெட் குறித்து இன்னும் படிக்கவில்லை; படித்ததும் அதை பற்றி கூறுவதாக தெரிவித்தார்.

என் பெயர் சாமி ஆனால் நான் சாமியார் இல்லை; அரசியல் வாதி தனக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் பல கோடியை கடன் பெற்று வெளிநாடு தப்பிச் சென்றவர்களை பிடித்து கொடுப்பதாக கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே