நாடு தழுவிய அளவில் 8-ம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்பதால் பேருந்துகள் இயங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8-ம் தேதி நாடு தழுவிய அளவில் அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நடைபெற உள்ளது.
இதில் தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்க இருப்பதால் அரசு பேருந்து இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடு முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து கழகம் சார்பில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதற்கான அனுமதிக் கடிதம் போக்குவரத்து அதிகாரிகளிடம் போக்குவரத்து சங்கங்களின் சார்பில் கடந்த 23-ம் தேதி வழங்கப்பட்டது.
குறைந்தபட்ச ஊதியம் 18,000. கான்ட்ராக்ட் முறையில் ஊழியர்களை பணியமர்த்துவதை நிறுத்த வேண்டும்.
தற்பொழுது ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்கக்கூடிய ஊழியர்களை நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் 8-ம் தேதி தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் பேருந்துகள் முடங்கும் அபாயம் உள்ளது.