சென்னையில் நேற்று போராட்டம் நடத்திய ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 10,000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

சென்னை ஆலந்தூரில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னையில் நேற்று தவ்ஹீத் ஜமா அத் உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கங்கள் பிரமாண்ட போராட்டம் நடத்தினர்.

ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி அவர்கள் பேரணியாக சென்ற நிலையில், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டம் நடத்திய தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா உட்பட 10000 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், சட்டத்துக்கு புறம்பாக போராட்டம் செய்தல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே