சென்னையில் களைகட்டும் தீபாவளி விற்பனை…!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடைத் தெருக்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றன.

விடுமுறை தினம் என்பதால் சென்னை தியாகராயநகரில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது.

சந்து பொந்துகளில் எல்லாம் கடைகள், புது ரக ஆடைகள், பல வண்ண டிசைன்கள், அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் வேறு எங்கே எல்லாம் சென்னை தியாகராய நகரில் தான்.

தீபாவளி போன்ற பண்டிகை என்றாலே சென்னைவாசிகள் திரள்வது சென்னை தியாகராய நகரில் தான்.

அங்குள்ள ரங்கநாதன் தெருவை ஒரு சுற்று சுற்றினால் போதும் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி விடலாம்.

அங்குள்ள பெரிய பெரிய கடைகளுக்கு சற்றும் சளைக்காமல் சிறு கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை வெகு நேரம் காக்க வைக்காமல் உபசரிப்பதில் சிறு கடைகளுக்கு நிகர் சிறு கடைகளே என பாராட்டுகிறார்கள் வாடிக்கையாளர்கள்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் வரும் நாட்களில் வியாபாரம் சூடு பிடிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே