குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ., கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பெண் பகுஜன் சமாஜ் எம்எல்ஏவை அக்கட்சியின் தலைவர் மாயாவதி அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளார்.

குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் தொடங்கியுள்ள போராட்டம் முற்று பெறவில்லை.

இந் நிலையில் இந்த சட்டத்தை ஆதரித்த சொந்த கட்சி எம்எல்ஏவை கட்சியில் சஸ்பென்ட் செய்து அதிரடி காட்டி இருக்கிறார் பிஎஸ்பி தலைவர் மாயாவதி.

நீக்கப்பட்டவர் பதேரியா தொகுதி பெண் எம்எல்ஏ ரமாபாய் பாரிக்கர்.

இது குறித்து மாயாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது, ஒழுக்கத்துடன் செயல்பட்டு வரும் பிஎஸ்பியில் யாராவது அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இப்போது அதுபோன்ற ஒரு கட்டுப்பாட்டை மீறியிருக்கிறார்.

ஆகவே கட்சியில் இருந்து அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் ஒழுக்கம், கட்டுப்பாட்டை யார் மீறினாலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறி இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே