Swiggy, Zomato மூலமாக வீடுகளுக்கு காய்கறிகள், பழங்களை விநியோகிக்க சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவலைக் கடுப்படுத்த ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையில் மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் கூட்டம் கூடுவதையும் தவிர்க்க அந்தந்த வீடுகளுக்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்ய சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை Swiggy, Zomato மூலம் டெலிவரி செய்யப்பட உள்ளது.
இந்த சேவையை பெறுவதற்கு மதியம் 1 மணிக்கு முன்னதாகவே இணையதளம் வயிலாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ ஆர்டர் செய்து கொள்ள வேண்டும்.
இதில் 18 வகையான காய்கறிகளும், 8 வகையான பழங்களும் அடங்கும். இதற்கான விலையை (www.cmdachennai.gov.in) தெரிந்து கொள்ளலாம்.
அதோடு 4 முதல் 5 நாட்களுக்கு தேவையான காய்கறிகள் தொகுப்பாகவும் விற்பனைக்கு உள்ளது.
மேலும் தகவலுக்கு: 9025653376/24791133