வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி நிதியுதவி..!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ்-க்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,”தெலுங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த தெலுங்கானா மக்களுக்கு தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் மழை வெள்ள நிவாரண பணிகளில் தெலுங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. 

வெள்ள நிவாரண பணியில் தெலுங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை உள்ளிட்ட பொருட்களையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் கனமழை காரணமாக அதன் தலைநகர் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 69-ஆக உயர்ந்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே