800 திரைப்படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன் – விஜய் சேதுபதி அறிவிப்பு..!!

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இயக்குநர் சீனுராமி, பாரதிராஜா, கவிஞர்கள் தாமரை, வைரமுத்து , சீமான், திருமுருகன் காந்தி என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் முத்தையா முரளிதரன் பயோபிக் படமான 800 இல் தொடர்ந்து நடிக்கிறேனா ? இல்லையா? என்பதை ஓரிரு நாட்களில் அறிவிப்பதாக விஜய் சேதுபதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்வியல் படத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்க்கை வரலாறு நல்ல கதை என்பதால், அதிலிருந்து பின்வாங்க போவதில்லை என்றும் இப்போது முன்வைக்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் ‘800’ படம் பதில் சொல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப்படுகொலைக்கு ஆதரவாக முரளிதரன் கருத்து தெரிவித்ததாக பல தரப்பினரும் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விஜய் சேதுபதி இவ்வாறு கூறியிருப்பது இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே