நீட் தேர்வை 2 முறை நடத்த தேசிய தேர்வுகள் முகமை திட்டம் ??

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை நடத்தலாமா? என்று கேட்டு தேசிய தேர்வு முகமை கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அச்சகத்துக்கு தேசிய தேர்வு முகமை எழுதியிருக்கும் கடிதத்தில், மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வை ஆண்டுக்கு இரு முறை, ஆன்லைன் மூலம் நடத்தலாமா? எனக் கேட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரே ஒரு முறை நடத்தப்பட்டால் அது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும்.

எனவே, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தலாமா? என்றும், வழக்கமான முறையில் நீட் தேர்வு நடத்துவது சற்று சிரமம் என்பதால் ஆன்லைனில் நடத்தலாமா என்றும் தேசிய தேர்வு முகமை கேள்வி எழுப்பியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே