போக்குவரத்து போலீசார் வழங்கிய ஒப்புகை சீட்டில் தமிழை காணவில்லை: உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறையினரால் வழங்கப்படும் அபராத ஒப்புகைச் சீட்டில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

போக்குவரத்து துறை வழங்கிய ஒப்புகைசீட்டு நகலை தமது ட்விட்டர் பக்கத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அதில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின் காவல் துறை வழங்கிய ஒப்புகை சீட்டில் தமிழை காணவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்தி மொழியே தேசிய மொழி என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியபோது, இரு மொழிக் கொள்கையை கடைபிடிக்கிறோம் என முதல்வர் பழனிசாமி கூறியது, இந்தி மற்றும் இங்கிலீஷ் தான் என சொல்லாமல் விட்டது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே