திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

வெவ்வேறு நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது மூன்று பயணிகளிடம் இருந்து 2 கிலோ 23 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த தங்கத்தின் மதிப்பு 74 லட்சத்து 24 ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு ரூபாய் என திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே