ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? – கமல் கேள்வி..!!

நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் ரூ170 கோடி கைப்பற்றபட்டதே..ஒப்பந்தக்காரர்களின் ‘பிக்பாஸ்’ யார்? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் மாவட்டங்களில் கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தார்.

அப்போது, தன்னை எம்.ஜி.ஆரின் நீட்சி என அடையாளப்படுத்திக் கொண்டார் கமல்ஹாசன்.

இதனால் அதிமுக, அமமுக கட்சிகள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. 

அரியலூரில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசனை கடுமையாக தாக்கினார்.

மேலும், கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை முன்வைத்தும் விமர்சித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதற்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல்வரும் பார்ப்பது மகிழ்ச்சிக்குரியது என நேற்றே ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமா சாடி ஒரு ட்விட்டர் பதிவு போட்டுள்ளார் கமல்ஹாசன்.

அதில், நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே