பிரதமர் மோடி வீட்டில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதிருப்தி

பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் தமக்கு செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வில்லை என பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதில் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியமும் கலந்து கொண்டார்.

அப்போது பிரதமர் வீட்டின் பாதுகாப்பு வீரர்கள் எஸ் பி பாலசுப்ரமணியதிடம் இருந்த செல்போனை வாங்கி உள்ளனர்.

ஆனால் பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான் மற்றும் சில நடிகைகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் பிரதமருடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், பிரதமர் மோடியின் வீட்டிற்கு விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற போது தம்மிடம் இருந்த செல்போனை வாங்கிய பாதுகாப்பு வீரர்கள், பாலிவுட் நடிகர்கள் அமீர்கான், ஷாருக்கான் மற்றும் சில நடிகைகள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது திகைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் எஸ் பி பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே