நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சையத் அப்துல் ரகுமான் கீலானி காலமானார்.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக அவர் 2016ம் ஆண்டு கூட்டம் நடத்தியதால் கீலானி மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது.
முன்னதாக 2001ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கீலானி பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மாரடைப்பால் அவர் காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.