சென்னை கஸ்தூரிபா குழந்தைகள் மருத்துவமனையில் தீ விபத்து..!!

திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரபபான சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் நேற்று இரவு திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகளும் அவர்களின் கூட இருந்தவர்களும் அலறி ஓட ஆரம்பித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

உடனடியாக அந்த தளத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் எல்லோரும் வேறு தளத்துக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.

அங்கிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களை சமாதானப்படுத்தினார். இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே