திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுருக்கிறது. 😰😰😰
மணப்பாறையை அடுத்த நடுக்காட்டு பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ, அங்கு சமீபத்தில் தோட்டத்துடன் கூடிய வீட்டை விலைக்கு வாங்கினார்.
கொத்தனாரான அவர், தோட்டத்தில் பயிரிட்ட சோளத்திற்கு தண்ணீர் பாய்ச்ச, ஆழ்குழாய் கிணறு தோண்டினார்.
30 அடி ஆழத்திற்கு தோண்டிய நிலையில் தண்ணீர் இல்லாத தால் அதனை மூடிவிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், அங்கு போடப்பட்ட மண் கரைந்து உள்ளே செல்ல, குழி மீண்டும் திறந்து கொண்டது.
இந்நிலையில் பிரிட்டோவின் இரண்டு வயது மகன் சுஜின், இன்று மாலையில் அங்கு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாரத விதமாக அந்த குழிக்குள் விழுந்து விட்டான்.
இதைகண்ட பிரிட்டோவும் மற்றோரும் சுஜினை மீட்க முயன்றனர். ஆனால் 25 அடி ஆழத்தில் குழந்தை சிக்கிக் கொண்டதால் அவர்களை முடியவில்லை. இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படையினரும், போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்றனர். ஆம்புலன்சும், மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.
குழந்தை சிக்கி உள்ள ஆழ்குழாய் கிணற்றுக்குள் பிரணவாயு செலுத்தப்பட்டு, ஒரு நுண்ணிய கேமிரா மூலம் குழந்தையை கண்காணிக்கும் பணியும் தொடங்கியது. இதனிடையே நான்கு பொக்லைன் எந்திரங்கள் மூலம், குழி தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் தொடங்கின.
சுமார் 5 மணி நேரமாக குழி தோண்டிய நிலையில் பாறை தென்பட்டதால், மாற்று வழியில் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற நாமக்கல், சேலம் மற்றும் மதுரையைச் சேர்ந்த மூன்று பேர் விசேச கருவிகளுடன் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த சில மணிநேரங்களில் குழந்தையை பத்திரமாக மீட்டு விடுவோம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரும் அங்கு சென்று மீட்பு பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.