சேலத்தில் ரயில்வே மேம்பாலத்துக்கு இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிக்காக இடையூறாக இருந்த கட்டடங்கள் பொலிஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன சேலம் செவ்வாய்ப்பேட்டை சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது இந்த நிலையில் 25 கட்டிடங்களின் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்ததால் இணைப்பு சாலைகள் அமைக்க முடியவில்லை இதனால் பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது இதற்கிடையே வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மேம்பாலத்தின் பணிகளை நிறுத்த முடியாது என்றும் கட்டடங்களை காலி செய்ய வேண்டும் எனவும் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டது அதன்படி இன்று கிரேன் உதவியுடன் கட்டடங்கள் அகற்றப்பட்டன அசம்பாவிதம் ஏற்படாத வகையில் செவ்வாய் பேட்டை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், கட்டுமான பணிகள் முடிந்து நான்கு மாதங்களில் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் நெல் ஜெயராமன் குறிப்புகள் : பெருமை சேர்த்துள்ள தமிழக அரசு
- இடப் பிரச்னையால் தாக்கிக்கொண்ட முன்னாள் நீதிபதி – பெண் தொழிலதிபர்