CAA-க்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள சிறுப்பான்மையினரான, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு குடியுரிமை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில், உச்சநீதிமன்றத்தில் 143 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், திருத்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே