காதலித்த பெண்ணின் நிர்வாணப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காதலன்…!!

வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் திருமணம் செய்ய மறுத்த பெண்ணின் நிர்வாணப் படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் கலையரசன். இவர், கடலூர் வண்டிப்பாளையத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து, செல்போன் விற்பனைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் அதே கடையில் வேலை பார்த்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் அப்பெண்ணும், கலையரசனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த கலையரசன், தனது காதலி தனக்கு அனுப்பி வைத்த அவரது நிர்வாண புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் கலையரசனை கைது செய்ததோடு, அவரது முகநூல் கணக்கினையும் முடக்கினர்.

இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே