BREAKING NEWS : ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நூறு நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையின் வழக்கில் ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சிபிஐ விசாரணைக் காவலை அடுத்து அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்டையே இதே வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்தது.

சிபிஐ கைதில் இருந்து அவருக்கு ஜாமின் கிடைத்த நிலையில், அமலாக்கத்துறை வழக்கில் அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தது.

105 நாட்களாக சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு ஜாமின் அளிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும்,

  • நீதிமன்ற அனுமதி இல்லாமல் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது,
  • 2 லட்சம் ரூபாய் ஜாமின் பத்திரம் இருவர் உத்தரவாதத்துடன் அளிக்க வேண்டும்,
  • சாட்சிகளிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது,
  • ஊடகங்களிடம் பேட்டி எதுவும் அளிக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

திகார் சிறையில் உள்ள சிதம்பரம் இன்று இரவே ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே