தனது மகளிடம் தவறாக நடந்துகொண்ட கணவரும், நடிகருமான ஈஸ்வர் மீது சென்னை மாநகர காவல் ஆணையரியம் நடிகை ஜெயஸ்ரீ புகார் அளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் வில்லி வேடங்களில் நடித்து பிரபலமானவர் ஜெயஸ்ரீ.
இவருக்கு முதல் திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்து பெற்றார்.
பின்னர் அவர் சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே ஈஸ்வருக்கும் மற்றொரு சின்னத்திரை நடிகையுமான மகாலட்சுமிக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தன்னை விவாகரத்து கோரி ஈஸ்வர் அடித்து துன்புருத்தியதாகவும், தனது மகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையரியரிடம் ஜெயஸ்ரீ புகார் அளித்துள்ளார்.
மேலும் குடிபோதைக்கு அடிமையான ஈஸ்வர் சூதாட்டத்தில் ஈடுபட்டு தனது நகைகளையும், பணத்தையும் அழித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.