நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை, 7 அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசினர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட குடும்பன், காலாடி உள்ளிட்ட ஏழு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், தேவேந்திரகுல வேளாளராக அறிவிக்க வேண்டும் எனக்கூறி 63 கிராமங்களில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் மக்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை அவரது இல்லத்தில்,
- அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ,
- திண்டுக்கல் சீனிவாசன்,
- ராஜலட்சுமி,
- தங்கமணி,
- விஜயபாஸ்கர்,
- காமராஜ் மற்றும்
- எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மக்களின் போராட்டத்தை கைவிட செய்து அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது.
அப்போது மக்களின் கோரிக்கை தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து அமைச்சர்களிடம் ஜான்பாண்டியன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.