ஏடிஎம்மில் பணம் எடுத்து தருகிறேன்!- சிக்கினான் நூதன கொள்ளையன்

ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவது போல் முதியவர்களை ஏமாற்றி நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை இராமநாதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காரைக்குடியைச் சேர்ந்த கோபி என்பவர் பணம் எடுக்க வரும் முதியவர்களுக்கு உதவுவது போல ஏடிஎம் கார்டுகளை பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக போலி ஏடிஎம்கார்டுகளை கொடுத்து பணத்திருட்டில் ஈடுபட்டுள்ளா.

இவர் கடந்த ஆறு மாதங்களாக திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் வரும் வாடிக்கையாளர்களிடம் கைவரிசை காட்டியுள்ளார்.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க வந்த கோபியை, காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.

2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே