இயக்குநர் மணிரத்னத்திற்கு காங்கிரஸ் திடீர் ஆதரவு

இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

கும்பல் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்டோர் மீது பீஹார் மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள கே.எஸ்.அழகிரி, ஜனநாயக விரோத, அச்சுறுத்தல் நடவடிக்கை எனக் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக விக்டோரியா மகாராணிக்கு கடிதம் எழுதியபோது, காந்தி மீது வழக்கு பதியவில்லை என குறிப்பிட்டுள்ள அழகிரி, ஆனால் மத்திய அரசின் தற்போதைய செயல், சர்வாதிகார போக்கை உணர்த்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டு நலனில் அக்கறையோடு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது பிணையப்பட்டிருக்கும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் எனவும் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே