தினையரிசியில் இப்படி சர்க்கரை பொங்கல் செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்.

(Serving: 1)
முக்கிய பொருட்கள்
1/2 கப் உமியுடன் கூடிய தினை
1/4 கப் பாசிப் பருப்பு
2 கப் நீர்
பிரதான உணவு
3/4 கப் வெல்லம்
3 தேக்கரண்டி நெய்
அழகூட்டுவதற்கு/ அலங்கரிப்பதற்கு
தேவையான அளவு முந்திரி
1/4 தேக்கரண்டி பொடியாக்கப்பட்ட ஏலக்காய்
தேவையான அளவு கிஸ்மிஸ்

How to make: தினையரிசியில் இப்படி சர்க்கரை பொங்கல் செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்.

Step 1:
ஒரு கடாயில் பாசிப்பருப்பை எடுத்து நன்கு வறுத்து எடுக்கவும் அதன் பிறகு குக்கரில் தினை அரிசி, வறுத்த பாசிப்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.

Step 2:
ஒரு பாத்திரத்தை எடுத்து வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து வெல்லம் ரையும் வரை 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.

Step 3:
நீராவி வெளியேறியதும், குக்கரைத் திறந்து அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். உருக்கி வைத்த வெல்லம் சேர்த்து 2 நிமிடம் நன்கு சமைக்கவும். சிறுது சிறுது நெய் சேர்த்து அனைத்தையும் நன்றாக களறிவிடவும்.

Step 4:
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும். அதன் பிறகு முந்திரி மற்றும் உலர் திராட்சையும் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.

Step 5:
வறுத்த முந்திரி, உலர் திராட்சையை குகக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.அவ்வளவு தான் சூடான சுவையான ஆரோக்கியம் மிகுந்த தினை அரிசி பொங்கல் தயார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே