திருநெல்வேலியில் பிரபலமான இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் தற்கொலை

தமிழகத்தில் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கரோனா பாதித்திருந்த நிலையில், தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே, எந்த விளம்பரமும், ஆடம்பரமும் இல்லாமல், ஒரே ஒரு குண்டு பல்புடன் இயங்கி வருகிறது இருட்டுக்கடை ஹல்வா.

நெல்லை மாவட்டத்துக்கே புகழ் சேர்க்கும் இருட்டுக் கடை அல்வாவின் தாயகம் ராஜஸ்தான்.

1930 – 1940களில், ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் நெல்லை மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயிலுக்கு எதிரே தொடங்கியதுதான் இந்த அல்வா கடை.

வெறும் ஹரிகேன் விளக்குடன் இருட்டாக இருக்கும் இந்தக் கடையை மக்கள்தான் இருட்டுக் கடை என்று அடையாளப்படுத்தினர்.

பிறகு அதுவே கடையின் பெயராகவும் மாறியது.

இந்த சமயத்தில்தான், அவரது கொரோனா தொற்று ஏற்பட்டது.. தொற்று இருப்பது தெரிந்ததுமே உடனடியாக டெஸ்ட் செய்தனர்..

அப்போது அவரது மருமகனுக்கும் டெஸ்ட் செய்தனர்.. இதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது..

பிறகு, உடனடியாக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார் ஹரிசிங்.

ஆனால் தனக்கு கொரோனா இருப்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.. தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து கொண்டிருந்தார்..

இந்நிலையில்தான் தற்போது, ஹரிசிங் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்..

இந்த சம்பவம் நெல்லை மக்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. . இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் வசித்து வந்த பகுதியில், சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே