இட்லி, தோசைக்கு இனி இந்த முள்ளங்கி சட்னி தான்..!!

எப்பொழுதும் கார சட்னி, தேங்காய் சட்னி என்று மட்டுமே சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதா. கவலை வேண்டாம்! முள்ளங்கியில் சுவையான, சூப்பரானா சட்னி காத்து கொண்டிருக்கிறது.

நேரத்தை வீணடிக்காமல் உடனே சமைத்து சாப்பிடுங்கள். இதனை இட்லி, தோசை போன்ற டிபனுக்கு கலக்கலாக இருக்கும்.

சரி வாங்க முள்ளங்கி சட்னியை எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்:-
முள்ளங்கி – 2 கப்
வெங்காயம் – 2
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
மல்லி விதை – 2 ஸ்பூன்
வரமிளகாய் – 4
பூண்டு பல் – 2
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். 

எண்ணெய் காய்ந்தபின் கடலை பருப்பு, மல்லி விதைகள், பூண்டு, வரமிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து ஒரு 10 நிமிடம் மூடி வேக வைக்கவும்.

நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும். வதக்கிய பொருள்களை நன்றாக ஆற வைத்து பின்பு மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவை கொண்டு தாளித்து சட்னியில் ஊற்றினால் சுவையான முள்ளங்கி சட்னி தயார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே