சதுரகிரி மலையில் நள்ளிரவில் திடீர் வெள்ளப்பெருக்கு

ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி கோவில் பகுதிகளில் உள்ள ஓடைகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பக்தர்களை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. மாதந்தோரும் அமாவாசை, பவுர்ணமி பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர்.

அப்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தீடிரென பெய்த கனமழையின் காரணமாக கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பக்தர்கள் 50க்கும் மேற்பட்டோர் சங்கிலிப் பாறை ஓடையைக் கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு, வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட பக்தர்களை 5 மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.

மேலும் கோயிலுக்கு சென்ற 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாததால் கோயில் மலை பகுதிகளிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே