பெண்களை சைட் அடிக்கவே மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர் : நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்

பெண்களை சைட் அடிக்க வேண்டும் என்பதற்காகவே மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதாக திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மார்கழி மாத கலைநிகழ்ச்சியை திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பாட்டு, நாடகம், நடனம் உள்ளிட்டவற்றில் திறமைகளை காட்டியவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஒய்ஜி மகேந்திரன், இன்றைய இளைஞர்கள் பெண்களை சைட் அடிக்க வேண்டும் என்பதற்காகவே போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினி அரசியலுக்கு வந்தால் சந்தோஷம் என்று கூறினார். வன்முறை பற்றி ரஜினி தான் பேச வேண்டும் என அவசியமில்லை என்று குறிப்பிட்ட ஒய்.ஜி. மகேந்திரன், அரசியல்வாதிகள் மாணவர்களை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே