தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி முதலமைச்சர் பழனிசாமிக்கே பிடிக்கவில்லை : ஓ.எஸ்.மணியன் சர்ச்சை

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி முதலமைச்சர் பழனிசாமிக்கே பிடிக்கவில்லை என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது.

நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி முதலமைச்சர் பழனிசாமிக்கே பிடிக்கவில்லை என கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சு தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே