பெரியாரின் பிறந்தநாளில் வணக்கத்தை உரித்தாக்குகிறோம் – கேரள முதல்வர் தமிழில் ட்வீட்..!!

பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதையடுத்து இன்று பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே