ஃபெப்சி ஊழியர்களுக்கு 20 லட்சம் நன்கொடை அளித்தார் நயன்தாரா

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா, ரூ. 20 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சினிமா தொழிலும் முடங்கி உள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளமான பெப்சியில் பல சங்கங்களை சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இதில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்பவர்கள்.

சினிமா படப்பிடிப்பு இல்லாததால் இவர்கள் அன்றாட உணவிற்கே கஷ்டப்படுவதாகவும், இவர்களுக்கு உதவ திரைப்பிரபலங்கள் முன் வர வேண்டும் என பெப்சியின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் வைத்தார்.

இதையடுத்து சிவக்குமார் குடும்பம், ரஜினி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில குறிப்பிட்ட நடிகர்கள் மட்டும் உதவினர்.

சிலர் அரிசி போன்றவற்றை அனுப்பி வைத்தனர்.

இதுவரை ரூ.1.69 கோடி மட்டுமே நிதி சேர்ந்துள்ளது.

விஜய், அஜித் போன்றவர்கள் இன்னும் அமைதி காக்கின்றனர். 

மற்ற மாநிலங்களில் உள்ள நடிகர்கள் அவர்கள் சார்ந்த தொழிலாளர்களுக்கு அள்ளி கொடுத்துள்ளனர்.

நீங்கள் அள்ளித்தர வேண்டாம், கொஞ்சம் கிள்ளியாவது கொடுங்கள் என பெப்சியும் கெஞ்சாத குறையாக கூறி வருகிறது.

நடிகர்களாவது கொஞ்சம் பேர் உதவினார்கள்.

ஆனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் பல நடிகைகள் எப்போதும் போல் அமைதி காக்கின்றனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் ரூ.1 லட்சம் நிதி வழங்கினார்.

இந்நிலையில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா, பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ.20 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே