தமிழக பண்பாட்டை அறிந்துகொள்ள ஜெர்மனி மாணவர்கள் வருகை

தமிழக பண்பாட்டை நேரில் அறிந்துகொள்ள ஜெர்மனி மாணவர்கள் வருகை தந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்வு 2வது கட்டமாக நடைபெறுவதாக கூறினார். 

கடந்த ஆண்டு பின்லாந்து மாணவர்கள் 18 பேர் தமிழகத்துக்கு வந்ததைப் போல, தற்போது ஜெர்மனி மாணவர்கள் 16 பேர் வருகை தந்துள்ளதாக கூறினார்.

இவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வீடுகளில் 14 நாட்களுக்கு தங்கி இருப்பார்கள் என தெரிவித்தார். 

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதுடன், தமிழகத்தின் கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம் குறித்தும் அவர்கள் நேரில் அறிந்து கொள்ள இருப்பதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே