ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, 1,000 ரூபாய் ரொக்கப்பணத்துடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நவம்பர் 29-ந் தேதி தொடங்கிவைத்தார்.

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பை இன்று முதல் 12-ந்தேதிக்குள் மக்களுக்கு வழங்கவும், விடுபட்டோருக்கு 13-ந்தேதி வழங்கவும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே