சென்னையிலிருந்து தொலைதூர பேருந்து சேவை நிறுத்தம்!

தமிழகத்தில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் நிலையில், சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்குச் செல்லும் பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளது.

இதன் காரணமாக அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும், அத்தியாவசியப் போக்குவரத்து வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

அறிவிப்பைத் தொடர்ந்து, நேற்று மாலை முதல் சென்னையில் இருந்து பயணிகள் சொந்த ஊருக்கு படையெடுத்தனர். 

இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

தொடர்ந்து, இன்று மாலை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் நிலையில் சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னையிலிருந்து வேலூர், ஆரணி, விழுப்புரம் போன்ற ஊர்களுக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே