வள்ளுவர் சிலை அவமதிப்பு; தேவையற்ற மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் – சீமான்

திருவள்ளுவர் சிலைக்கு காவி வேஷ்டி கட்டுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று திருச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், திருவள்ளுவர் சிலைக்கு காவி வேஷ்டி கட்டுவது மற்றும் விபூதி பூசுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே