தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா? – உச்சநீதிமன்றம் அதிருப்தி

நாட்டில் தனிநபர் ரகசியம் என்பதே கிடையாதா?? என உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மூத்த காவல் அதிகாரியான முகேஷ் குப்தா என்பவர் ஊழல் வழக்கு ஒன்றில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தனது அலைபேசியை மாநில அரசு ஒட்டுக் கேட்பதாக கூறி முகேஷ் குப்தா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நாட்டில் என்னதான் நடக்கிறது?? தனிநபர் ரகசியம் என்பதே இல்லாத சூழல் உருவாகி விட்டதா?? என வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

எதன் அடிப்படையில் தனிநபரின் அலைபேசியை ஓட்டு கேட்க அனுமதி அளித்தார்கள் என வினவிய நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சத்தீஸ்கர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே