தெலுங்கானாவில் நில பத்திர பதிவுக்கு லஞ்சம் கேட்ட பெண் தாசில்தார் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் விஜயா ரெட்டி என்பவர் தாசில்தாராக உள்ளார்.
இவரிடம் சுரேஷ் என்ற விவசாயி, நில பத்திர பதிவு தொடர்பாக முறையிட்டுள்ளார்.
அதற்கு விஜயாரெட்டி லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மோதல் போக்கு தீவிரமானதை தொடர்ந்து சுரேஷ் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென தாசில்தார் மீது ஊற்றி தீ வைத்து எரித்தார்.
அலறி துடித்தவாறு அறையில் இருந்து வெளியே வந்த தாசில்தாரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார்.
எரித்து கொன்ற சுரேஷ் போலீசாரிடம் சரணைடைந்தார்.
அரசு அலுவலகத்தில் பெண் வட்டாச்சியரை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது