கோயம்பேட்டில் இருந்து மாமல்லபுரத்துக்கு மாநகரப் பேருந்தை ஓட்டுநர் ராஜேஷ்கண்ணா என்பவர் ஓட்டிச் சென்றார்.
வேளச்சேரி 100 அடி சாலையில் பேருந்து சென்றபோது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து பேருந்தை நிறுத்த அவர் முயன்றபோது, அவ்வழியே சென்ற காரில் மோதியது.
இதையடுத்து அடுத்தடுத்து சுமார் 10 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே பேருந்தில் இருந்த ஓட்டுநர் ராஜேஷ்கண்ணாவை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு ராஜேஷ்கண்ணாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரிய அளவில் விபத்து தவிர்க்கப்பட்டது.