துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு பயிற்சி பெற டெல்லி சென்ற அஜித்

அஜித் தேசிய அளவிலான துப்பாக்கிச்சூடு போட்டியில் கலந்துக் கொள்ள டெல்லிக்குச் சென்று உள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

இவர் நடிப்பது மட்டுமின்றி கார், பைக், ஆளில்லா விமானம் இயக்கும் ஏரோ மாடலிங், ஃபோட்டோகிராபி என பலவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Actor Ajith

இதுதவிர துப்பாக்கிச்சுடும் உரிமம் வைத்துள்ள அஜித், சமீபத்தில் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான 45-வது துப்பாக்கிச் சூடு போட்டியில் கலந்துக் கொண்டு தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி மையத்தில், 10 மீட்டருக்கான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

அதற்காக அஜித் விமான நிலையத்தில் புறப்பட்டு செல்லும் புகைப்படங்கள் வெளியானது.

சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலுக்கு குட்பை சொல்லி மீண்டும் இளமை தோற்றத்துக்குத் திரும்பிய அஜித் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே