பாஜகவின் செயல்பாடுகளால் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தது வரவேற்கத்தக்கது : உதயநிதி ஸ்டாலின்

பாஜகவின் செயல்பாடுகளால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றினையும் நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை திமுக போராட்டம் நடத்தும் எனக் கூறினார்.

மேலும், மாணவர்கள் மீதான நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாகவும் குறிப்பிட்டார். பாஜகவால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் உதயநிதி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே