முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் செப்.26ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் செப்.26ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.26ம் தேதி காலை 9.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து துறைகளின் அமைச்சர்களின் கலந்துகொள்ள உள்ளனர்.

அக்டோபர் மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடக்க உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே