இதுவரை 1 லட்சம் முறை ஆட்சிமாற்றம் வரும் என ஸ்டாலின் கூறிவிட்டார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இதுவரை ஒரு லட்சம் முறை ஆட்சி மாற்றம் வரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருவதாகவும், ஆனால் அவரது கனவு பலிக்காது என்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.

நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணனை ஆதரித்து, தெற்கு அரியகுளம் பகுதியில் அமைச்சர் உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் ஆட்சி மாற்றம் எனும் பலாப்பழத்தை காட்டி திமுக தொண்டர்களை ஸ்டாலின் வழிநடத்துகிறார் என்றும், ஆனால் இன்றைக்கும் அந்த பலாப்பழம் அவருக்கு கிடைக்காது என தெரிவித்தார்.

மேலும் தமிழக முதல்வர் பழனிசாமி உடன் போட்டிபோட முடியாமல் ஸ்டாலின் தத்தளித்து வருவதாகவும் விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே