தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் 350 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிதும் கவலைப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அளவிலான அரசியல் அமைப்பு நிலை பயிலரங்கம் பழனி அருகே உள்ள தொப்பம்பட்டியில் தொடங்கியது.
இதில் கலந்து கொண்ட முத்தரசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது காவல் துறை ஊழல் குறித்து கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.
தமிழக அரசு மின்சார ரயில்களை தனியார்மயம் ஆக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது தவறு என்றும், இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.